கோவை : கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழையின் தன்மையைப் பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், இரவு முதல் அதிகாலை வரை பெரிய அளவிலான மழைப்பொழிவு இல்லாததால் விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.