நாகர்கோவில்: கோட்டாறு ஈத்தாமொழி விலக்கு சந்திப்பில் 200 எம்.எம். பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனையடுத்து, இதனை சரி செய்யும் பணியில் மாநகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த உடைப்பு உடனடியாக சரிசெய்யப்பட்டு விடும்.
இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு இருக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதவி செயற்பொறியாளர் ரகுராமன் கூறினார். இதன் காரணமாக கோட்டாறு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.