க.பரமத்தி, நவ. 7: கொப்பரை தேங்காய் கிலோவிற்கு ரூ.4க்கு குறைந்து ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளான புன்னம், அத்திப்பாளையம், குப்பம், முன்னூர், தென்னிலை, மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், மற்றும் புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் விலையும் தேங்காய்களை உடைத்து காயவைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்ததுபோக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். அங்கு நேற்று கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 765 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது.
கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ,78, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.86 ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட கிலோவிற்கு ரூ.4 குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதேபோல் தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 12700 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.22, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.29க்கு ஏலம் போனது.கடந்த வாரத்தைவிட கிலோவிற்கு ரூ.1 உயர்ந்து ஏலம் போனது. இந்த வார ஏலம் பெரிய அளவில் உயர்வு இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.