புதுடெல்லி: சட்டீஸ்கர் அம்பிகாபூர் தொகுதியில் சிங்க்டியோ காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘காங் ஆட்சிக்கு வந்தால் முதல்வராக பூபேஷ் பாகேல் இருப்பார். இருந்தாலும், முதல்வர், துணை முதல்வர் பொறுப்பு வகிப்பவர்களை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். இரண்டரை ஆண்டு சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சர்ச்சையால் எனக்கும், பாகேலுக்கும் இடையில் விரிசல் என்பது ஊடகங்களின் கருத்து மட்டுமே. அதனால் எங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலும், ஆட்சி நிர்வாகத்தை பாதிக்காமல் பார்த்துக்கொண்டோம். பாஜவை பொறுத்தவரை அவர்களுக்கு மாநில நலன் என்பது பற்றி தெரியாது. தேர்தல் வந்தால் ஓட்டு கேட்க இங்கு வந்து விடுவார்கள். கடந்த 5 ஆண்டில் மோடியை இங்கே நான் பார்க்கவேயில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ் 75 இடங்களில் வெல்ல திட்டமிட்டுள்ளோம்’ என்று சிங் டியோ தெரிவித்தார்.