ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியை சேர்ந்தவர் வேம்புகுரு. இவரது மனைவி லட்சுமி(59). இவர்களது மகன்கள் மாரிச்செல்வம் (30), மணிகண்டன் (25). மாரிச்செல்வம் திருமணமாகி செய்துங்கநல்லூரில் குடும்பத்தினரோடு தனியாக வசித்துள்ளார். கருங்குளம் வட்டார காங்கிரஸ் செயலாளராகவும் இருந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொங்கராயக்குறிச்சிக்கு குடிபெயர்ந்த மாரிச்செல்வம், தாயார் லட்சுமியிடம் கடந்த 3ம் தேதி சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தாய் லட்சுமி, தம்பி மணிகண்டன் ஆகியோர் அவரை கம்பால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்கது லட்சுமி, மணிகண்டன் கைது செய்யப்பட்டனர்.