கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தடைகளை தகர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹவுராவில் தடுப்புகளில் ஏறி, முழக்கங்கள் எழுப்பி போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேற முயற்சி செய்து வருகின்றனர். தடியடி நடத்தி போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்து, விரட்டி வருகின்றனர். மேற்கு வங்க தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறை கலைத்து வருகிறது.