டெல்லி: கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதிகேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ஜி கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் -பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். மருத்துவ மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.