மேற்குவங்கம்: கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி இன்று முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் மருத்துவமனையில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன.