கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடியது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ஜி கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படித்துவந்த பெண் மருத்துவர் அண்மையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதன்கிழமை இரவு மேற்குவங்கம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் 40-க்கு மேற்பட்ட சமூக விரோதிகள் மருத்துவமனைக்குள் புகுந்து சூறையாடி உள்ளனர்.