திருப்பூர்: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தியுடன் ஊர்வலமாக வந்து மௌன அஞ்சலி செலுத்தினர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிலும் மாணவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்திய படி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஊர்வலமாக வந்து மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் கருப்பு பட்டை அணிந்தும் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும் இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாகவும் பதாகைகளை ஏந்திய படி மௌன அஞ்சலி செலுத்தினர்.