கொல்கத்தா :மேற்குவங்க சட்டப்பேரவையில் அபராஜிதா என்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேறியது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டம் மேற்குவங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.