டெல்லி: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் தாமதமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ததை நியாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் கொல்கத்தா காவல்துறை மீது அதிருப்தி. எஃப்.ஐ.ஆரில் ஆர்ஜி கர் மருத்துவமனையை சேர்க்காதது ஏன் என்றும் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.