கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவமனை வன்முறை தொடர்பாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி எம்.டி. படித்துவந்த பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மேற்குவங்கம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடந்தது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் வன்முறை கும்பலை போலீசார் விரட்டி அடித்தனர்.