கொல்கத்தா: மேற்குவங்கம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கொலை அதிர்ச்சியளிக்கிறது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நீதிக் கேட்டு மக்கள் போராடி கொண்டிருக்கும்போது குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிக்கின்றனர். பெண்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற குற்றங்களே போதும். தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்த நிலை ஏற்பட எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது என்று குடியரசுத் தலைவர் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.