சென்னை: கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர், திருவள்ளூர் உள்ளிட்ட 3 கிராமங்கள் உள்ளன.
3,78,168 பொதுமக்கள் வசிக்கும் கொளத்தூர் வட்டத்தில் பொதுப் பிரிவு, சமூக பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கொளத்தூர் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்பட 36 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.