சென்னை: கொளத்தூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த டெலிவரி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செகண்ட் ஹேண்ட் வாகனங்களின் ஆவணங்களை வலைதளத்தில் இருந்து எடுத்து திருட்டு வாகனங்களில் பயண்படுத்தியுள்ளனர். கடந்த 2 மாதத்தில் 12-க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி போலி ஆவணம் மூலம் டெலிவரு ஊழியர்களுக்கு விற்றுள்ளனர். டெலிவரி ஊழியராக வேலை பார்த்துக் கொண்டே நோட்டமிட்டு இரவில் வாகனங்களை திருடியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.