சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டுள்ளது. படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவு சாப்பிட ஒரு தளம் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது.