சென்னை : ஏடிஎஸ் கொசுவை ஒழிப்பதே ஒரே வழி என்பதை உணர்ந்து கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், “அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை கருவிகளை அதிகரிக்க வேண்டும்; 24மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவர்கள் பணியிலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்,”என்றார்.