கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருவர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய், ஜம்ஷேர் அலி ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 8 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் மேலும் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.