ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்.27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான் உட்பட 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியா கருதப்படும் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான 49 பேரைக் கொண்ட குழு விசாரித்து வருகிறது.
இது குறித்த வழக்கு நீலகிரி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது; கொடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த வாளையார் மனோஜ் இன்று உதகை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி செப்.27-க்கு ஒத்திவைத்தார்.