கொடைக்கானல்: தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 4 தினங்களாக சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்த மூன்று பங்குகளிலும் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கொடைக்கானல் வந்த சுற்றுலாப்பயணிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள், உள்ளூர் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். நேற்று மாலை டீசல் மட்டும் ஒரே ஒரு பெட்ரோல் பங்குக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தது.