திண்டுக்கல்: கொடைக்கானல் வெள்ளகவி பகுதிக்கு விரைவில் சாலை அமைத்து தரப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மலை கிராமங்களில் 10 குடும்பங்கள் கூடிய பகுதியாக இருந்தாலும் அங்கு அரசு சாலை அமைத்து கொடுத்து வருகிறது. வெள்ளகவி பகுதியில் சாலை அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது, அனுமதி கிடைத்ததும் சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.