Tuesday, March 5, 2024
Home » கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கு தயாராகும் பிரையன்ட் பூங்கா: 2ம் முறை நாற்று நடும் பணி தொடக்கம்

கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கு தயாராகும் பிரையன்ட் பூங்கா: 2ம் முறை நாற்று நடும் பணி தொடக்கம்

by Arun Kumar

கொடைக்கானல்: கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சிக்கு தயாராகும் வகையில் பிரையன்ட் பூங்காவில் 2ம் கட்டமாக மலர் நாற்றுகள் நடும் பணி இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக பிரையன்ட் பூங்கா உள்ளது. இங்கு வரும் மே மாதம் 61வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதையொட்டி முதற்கட்டமாக கடந்த நவம்பரில் ஒன்றரை லட்சம் சால்வியா, டெல்பினியம், பிங்க் ஆஸ்டர், லில்லியம், ஆர்நத்திகளம் உள்ளிட்ட பல்வேறு மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டன. இந்நிலையில் 2ம் கட்டமாக கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட வீரிய ஒட்டுரக 10 ஆயிரம் டேலியா மலர்ச்செடிகள் நடும் பணி இன்று தொடங்கியது.

மலர் நாற்றுக்கள் நடவு பணியை கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் காயத்ரி, உதவி இயக்குனர் கயல்விழி, பிரையன்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் காயத்ரி கூறுகையில், ‘‘2ம் கட்ட பணி ஒரு வாரம் நடைபெறும்.

3ம் கட்டமாக வரும் பிப்ரவரியில் மலர் நாற்றுக்கள் நடும் பணி நடைபெறும். இதனைத்தொடர்ந்து வரும் மே மாதம் நடைபெறும் கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியின்போது சுமார் ஒரு கோடி மலர்கள் இந்த பூங்காவில் பூத்துக்குலுங்கும்’’ என்றார்.

You may also like

Leave a Comment

6 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi