திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பேருந்துகள்,லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தி வருவதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தது, இதன் அடிப்படையில் இன்று திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் பேருந்து நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் 2 அரசு பேருந்துகளில் ஏர் ஹாரன் இருந்தது தெரியவந்தது. இதே போன்று தனியார் பேருந்துகளிலும் ஏர் ஹாரன் இருந்தது, இதனையடுத்து ஏர் ஹாரன் அகற்றப்பட்டு, ஓட்டுனர் உரிமம்,நடத்துனர் உரிமம் காலாவதியாகியும் புதுப்பிக்காமல் இருந்த காரணத்திற்காகவும், ஏர் ஹாரன்பயன்படுத்தியற்காகவும் ரூ.20,000 வீதம் 4 பேருந்துகளுக்கு அபராத தொகையும் விதிக்கப்பட்டது.
இதனை பார்த்த மற்ற தனியார் பேருந்துகளும் தானாக முன் வந்து ஏர் ஹாரனை அகற்றினர்,மேலும் மலைப்பகுதியில் ஏர் ஹாரன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.