கொச்சி : கொச்சி துறைமுகம் அருகே 2 நாட்களுக்கு முன் கடலில் சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியது. கப்பல் கவிழ்ந்த நிலையில் கொச்சி கடல் பரப்பில் எண்ணெய் படலம் படர்ந்துள்ளது. இதையடுத்து, கரையில் இருந்து 37 கி.மீ. தொலைவுக்குள் மீன்பிடிக்கக் கூடாது என்று கேரள அரசு தடை விதித்துள்ளது. கடலில் எண்ணெய் படலம் உள்ளதால் அங்குள்ள மீன்களை சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொச்சி கடலில் எண்ணெய் படலம் – மீன் பிடிக்கத் தடை
0