நாகர்கோவில்: நாகர்கோவில் கோணத்தில் ரூ.2.50 கோடியில் அறிவு சார் மையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு செய்தார். அவருடன் ஆணையர் ஆனந்த மோகன், இன்ஜினியர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் ஜவகர், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சி.டி. சுரேஷ், நிர்வாகிகள் எம்.ஜே. ராஜன், வேல்முருகன், ஷேக் மீரான் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.
கட்டுமான பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் மேயர் மகேஷ் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், அறிவு சார் மையம் மாணவ, மாணவிகளுக்கு மிகப் பெரிய வழிகாட்டி மையமாக அமையும். தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் இந்த மையம் திறக்கப்படும். இதில் நூலகங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் உள்ளிட்டவை இடம் பெறும் என்றார்.