ஒவ்வொரு சருமமும் ஒரு விதம், ஒவ்வொரு சருமத்திற்கும் தனித்தனி பராமரிப்புகள் அவசியம். ஒருவருக்குச் சொன்ன ஆலோசனைகள், கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் நிச்சயம் இன்னொருவருக்கு பொருந்தாது. காரணம் சருமம் என்பது புறத்தோற்றம் பொருத்தது மட்டுமல்ல, நாம் உட்கொள்ளும் உணவு, வாழ்க்கைமுறை, பரம்பரை, குடும்பம், இப்படி அனைத்தும் சேர்ந்துதான் நம் சருமம். என்பதால் தனித்தனிக் கவனிப்புகள் அவசியம். அதற்குத்தான் உதவுகிறது ‘கியூர்ஸ்கின்: ஸ்கின்-ஹேர் எக்ஸ்பெர்ட்’ (Cureskin: Skin & Hair Experts). நேரடியான டயட் திட்டங்கள், சருமம் பராமரிப்புகள், மருத்துவர்கள் ஆலோசனைகள் மேலும் ஆன்லைனிலேயே மருத்துவர் பரிசோதனை உள்ளிட்ட அனைத்துமாக இந்தச் செயலி செயல்படுகிறது. உங்களின் சருமம், கூந்தல் என எந்தப் பிரச்னைக்கும் இந்த செயலி உங்கள் கைகளிலேயே தீர்வு கொடுக்கிறது.