Tuesday, April 23, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

* இறைச்சிக்கு மசாலாவை சேர்த்து சட்டியில் வேகவிடவும். பாதியாக மசாலா வற்றியதும் குக்கரில் வைத்து, மிதமான தீயில் வைத்தால் ருசி குறையாது.
* பிரியாணிக்காக இறைச்சியை வேக வைப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கும் முன்பே, தயிர், இஞ்சி, பூண்டு, மசாலா கலந்து வைத்து விட வேண்டும். பின்னர் வேகவைத்தால் இறைச்சியில் மசாலா நன்கு இறங்கி சுவை கூடுதலாக இருக்கும்.
* இறைச்சிக் குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் சோற்றை உருண்டைகளாக்கிப் போட்டு, சிறிது நேரம் கழித்து எடுத்து விட்டால் சரியாகிவிடும்.
* இறைச்சி சமைக்கும்போது பெரிய வெங்காயத்தை விட சிறிய
வெங்காயம் அதிக ருசி தரும்.
* புளிக்குழம்பு கொதிக்கும்போது சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து போட்டால் மணமுடனும் ருசியுடனும் இருக்கும்.
* அரிசி டின்னில் சிறிது வேப்பிலை போட்டு வைத்தால் புழு, வண்டு ஏதும் வராது.
* வேகவைத்த முட்டையை பாதியாக நறுக்குவதற்கு கத்தியை உபயோகப் படுத்தினால் முட்டை உதிர்ந்து வீணாகக் கூடும். நூல் வைத்து நறுக்கினால் அழகாக வரும்.
* மஞ்சள் கிழங்கில் சிறிது விபூதி கலந்து வைத்தால் வண்டு வராது.
* ஒரு கப் மாவிற்கு ஒரு தேக்கரண்டி வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி செய்தால் உப்பலாக வரும்.
* மீன் சமைக்கும்போது எலுமிச்சைச்சாறு துளி விட்டால் ருசியாகவும் இருக்கும் மீனும் கறுக்காது.
* காரக்குழம்பு வைக்கும்போது புளிக்குப் பதில் தக்காளிப் பழங்களைப் போட்டு வைத்தால் குழம்பு ருசியாக இருக்கும்.
* காய்கறி, பழங்களை வாங்கும்போது புதிதாக பார்த்து வாங்க வேண்டும். கடையிலோ, வீட்டிலோ இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவற்றின் சத்துக்கள் குறைந்துகொண்டே இருக்கும்.
* ப்ளோரசண்ட் பல்புகளுக்கு அடியில் உள்ள பழங்களை வாங்கக் கூடாது. அவற்றில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு சத்துக்கள் குறைந்துவிடும்.
* கவரில் போட்டு வைத்திருக்கும் பழங்களைவிட உதிரியாகக் கொட்டி வைத்திருப்பவையே சிறந்தது. தரமானதாகப் பார்த்து எடுக்கமுடியும்.
* காய்கறிகளை அதிகநேரம் வேக வைத்தாலும் சத்துக்கள் வீணாகிவிடும்.
* பழங்கள், காய்கறிகளை நிறைய வாங்கி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். அவ்வப்போது தேவைக்கு மட்டும் வாங்கிக் கொள்ளவும்.
* பச்சை மிளகாய்களை ஒரு டப்பாவில் போட்டு அதோடு ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியைப் போட்டு இறுக்க மூடி வைத்துவிட்டால் பச்சைமிளகாய் பழுக்காமல் நன்றாகப் பச்சை பசேலென்று இருக்கும்.
* தக்காளி, எலுமிச்சைப்பழம் கெடாமலிருக்க உப்பு கரைத்த தண்ணீரில் போட்டுவைக்க வேண்டும்.
* அப்பளம் வைத்திருக்கும் டப்பாவில் ஒரு பெருங்காயக் கட்டியையும் சேர்த்துப் போட்டு வைத்தால் அப்பளம் சீக்கிரம் நமத்துப்போகாது. வாசனையும் அருமையாக இருக்கும்.
* கீரையைப் பொரியல் செய்யும்போது தேங்காய் எண்ணெயில் வதக்கினால் அதிக சுவை கிடைக்கும்.
* கேஸ் சிலிண்டரில் ஒரு பையைக் கட்டி வைத்துவிட்டால், பால் கவர்களை அதில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
* தேய்ந்துபோன, பயன்படுத்த முடியாத சோப்புத் துண்டுகளை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் பாத்திரம் தேய்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீன் கழுவிய பிறகு கைகளைக் கழுவவும் பயன்படும்.
* குக்கர் கேஸ்கட்டை பயன்படுத்திய பிறகு ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் நீண்ட நாட்கள் உழைக்கும். – அமுதா அசோக்ராஜா
* நெய்யில் ஒரு சிறுகட்டி வெல்லத்தைப் போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.
* எந்த ஸ்வீட் செய்யும்போதும் ஒரு சிட்டிகை டேபிள்சால்ட் சேர்த்துக் கொள்ளவேண்டும். இது இனிப்புக்கு மணம் கூட்டுவதுடன் திகட்டாமல் இருக்கும்.
* துவரம் பருப்பு சில சமயங்களில் குக்கரில் வைத்தாலும்கூட வேகாமல் இருக்கும். அதுபோன்ற பருப்பு மீதம் இருந்தால், சமைப்பதற்கு அரைமணி நேரம் முன்பே ஊறவைத்துவிட்டு, பிறகு வேகவைத்தால் குழைய வெந்து விடும்.அதுபோன்று பருப்பை வேக வைக்கும்போது அதனுடன் அரைதேக்கரண்டி விளக்கெண்ணெயை ஊற்றி வேகவிட்டால் விரைவில் வெந்துவிடும்.
* சாதம் வடிக்கும்போது ஓரிரு துளி நல்லெண்ணெய் ஊற்றினால் சாதம் உதிரி உதிரியாகக் கிடைக்கும்.
* பெரிய வெங்காயத்தைப் பாதியாக நறுக்கிவிட்டு உரித்தால் உரிப்பது சுலபமாக இருக்கும்.
* மிளகாய்ப் பொடிக்கு வறுக்கும்போது கொஞ்சம் கடுகு, எள், மிளகு இவற்றையும் வறுத்துச் சேர்த்துக் கொண்டால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
* புளியோதரையில் சிறிது மிளகுப்பொடி தூவினால் கோயிலில் செய்யும் புளியோதரைப் போலவே சுவையாக இருக்கும்.- எல்.உமா மகேஸ்வரி.
* அடைமாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் பிரெட்தூளை சிறிது போட்டு கலந்தால் மாவு கெட்டிப்படுவதுடன் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
* எந்த சிப்ஸ் செய்தாலும் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் இரண்டையும் சூடு செய்து கடைசியில் மேலே விட்டுக் குலுக்கினால் அசல் கேரளா தேங்காய் எண்ணெயில் செய்தது போலிருக்கும்.
* உடைக்காத தேங்காயை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். உடைக்கும்போது நீரும் சுவையாக இருக்கும்.
* ஆறிப்போன தேநீரில் ஆறிப்போன பாலை நிறைய ஊற்றி அருந்தினால் தாகம் தணியும்.
* மிக்சியை கழுவும்போது துளி டூத் பேஸ்ட் தடவி தேய்த்துத் துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
* காப்பர் பாத்திரங்களில் பாட்டம் மங்கிவிட்டால் சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் தேய்த்தால் பளிச்சென்று புதுப் பாத்திரம் போல் ஆகிவிடும்.
* கல்உப்பை ஒரு கைப்பிடியளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஓரிரு நிமிடங்கள் ஓட்டினால் பிளேடுகள் கூர்மையாகிவிடும்.- நெ.இராமகிருஷ்ணன்.

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi