Sunday, February 25, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

* வாழைப்பூ சுத்தம் செய்யும்போது கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் கையில் கறை ஒட்டாது.t
* குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.
* சப்பாத்தி சாஃப்ட் ஆக வருவதற்கு மாவு பிசையும்போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
* சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும் வர, அரிசி ஊற வைக்கும்போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.
* கறிவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்றுபுகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது.
* தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய்த் தொட்டியை அடுப்பில் வைத்து லேசாக வாட்டி எடுத்தால், தேங்காய் எளிதாக எடுக்க வரும்.
* மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மாவின் மேல் எண்ணெய் தடவி, காற்று புகாமல் மூடி வைத்தால் மாவு கலர் மாறாமல் அப்படியே இருக்கும்.
* பூரி செய்வதற்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது.
* தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.
* அரிசியில் பூச்சி வராமல் இருக்க, வரமிளகாய் அல்லது பிரியாணி இலை இதில் ஏதாவது ஒன்றை அரிசியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.
* பாதாமின் தோலை ஈசியாக உரிக்க, பாதாமில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் ஊற வைத்தால் பாதாமின் தோல் எளிதாக உரிந்து வரும்.
* வீட்டில் செய்யும் ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகர் சேர்த்து கலந்து வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.
* தோசை பொன்னிறமாக வர, இட்லி மாவுடன் சிறிதளவு கடலைமாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறு மொறுப்பாகவும், பொன்னிறமாகவும் இருக்கும்.
* ஏலக்காயை பொடியாக அரைக்க ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்துவிடும்.
* மெதுவடை மொறுமொறுப்பாக இருக்க, உளுந்தம்பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊறவைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.
* துவரம்பருப்பை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
* காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல் வெகுநேரம் வைத்திருந்தால், காற்றுபட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.
* சிலர் பாகற்காயை வெட்டிய பின் வேக வைத்து, அந்த தண்ணீரை கொட்டிவிடுவர். இவ்வாறு செய்தால், பாகற்காயிலுள்ள சத்துகள் வீணாகிவிடும். அதற்குப் பதில், பாகற்காயின் மேல் முள்ளை லேசாக நீக்கிவிட்டு, இரண்டாகப் பிளந்து, பாகற்காயின் உள்ளேயும், வெளியேயும் சிறிது உப்பையும், மஞ்சள் பொடியையும் தடவி அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பின் அதை அலசிவிட்டு உபயோகித்தால், கசப்பு குறைந்துவிடும்.
* உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.
* தனி ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும்போது 2 தேக்கரண்டி வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால் பாயசம் கெட்டியாக இருப்பதோடு மணமாகவும் இருக்கும்.
* அடைக்கு ஊறப்போடும்போது துவரம்பருப்புக்குப் பதில் கொள்ளை ஊறப்போட்டால் அடை சுவையாக இருக்கும் வாய்வுத் தொந்தரவும் இருக்காது.
* கொத்துமல்லித் துவையல் அரைக்கும்போது மிளகாய்க்குப் பதில் மிளகை வறுத்து வைத்து அரைத்தால் சுவையும் கூடுதலாகும். உடலுக்கும் நல்லது.
* ரவா உப்புமா மிஞ்சிவிட்டால் அதில் சிறிதளவு அரிசிமாவைக் கலந்து வடைபோல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான ஸ்நாக்ஸ் ரெடி.
* வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றி வைத்தால், நான்கு நாட்கள் வரை கறுக்காமல் அப்படியே இருக்கும்.
* கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்தால் காயாமல் இருக்கும்.
* இட்லிமாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையைக் காம்பு கிள்ளாமல் மாவு பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். வெளியே வைத்தாலும், இரண்டு நாட்களுக்கு மாவு கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
* பெருங்காயம் கட்டியாகி விடாமல் இருக்க. ஒரு பச்சை மிளகாயை காம்புடன் பெருங்காய டப்பாவில் போட்டு வைக்கலாம்.
* காப்பா் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.
* முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
* இட்லிமாவில் ஆப்பச்சோடா கலப்பதற்கு பதில் 1 குழிக்கரண்டி நல்லஎண்ணெய் சேர்த்து கலந்து இட்லி சுட்டால் இட்லி மிருதுவாக இருக்கும்.
* வற்றல்குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் குழம்பு ருசியாகவும் நல்ல மணமாகவும் இருக்கும். – கவிதா பாலாஜிகணேஷ்

You may also like

Leave a Comment

eighteen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi