* ஊறுகாய் மேல் அதிகம் எண்ணெய் மிதந்தால் அதை காரக்குழம்பு வைக்க பயன்படுத்தலாம்.
* வடைக்கு உளுந்து அரைக்கும்போது கனிந்த வாழைப்பழம் பாதியைப் போட்டு அரைத்து வடை செய்தால், அதிகம் எண்ணெய் குடிக்காமல் சாஃப்ட்டாக, டேஸ்ட்டாக இருக்கும்.
* மோர்க்குழம்பு செய்யும்போது அதில் ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து சேர்த்தால் மோர்க்குழம்பு சுவையாக இருக்கும்.– அமுதா அசோக்ராஜா.
* வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு செய்யும்போது கொழ கொழப்புத்தன்மையைத் தவிர்க்க, நறுக்கிய வெண்டைக்காயில் சிறிதளவு மாங்காய்த் தூள் (ஆம்சூர் பவுடர்) தூவி, சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி,பிறகு சமைக்கலாம். மாங்காய்த்தூள் இல்லாதவர்கள் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து வதக்கலாம்.
* மாங்காயை சிறிதளவு துருவி பொரித்த குழம்பு மற்றும் கூட்டு வகைகளில் கடைசியாகப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால், சுவை கூடும். மாங்காய் சீசனில் மாங்காய்கள் வாங்கி, துருவி, வெயிலில் காயவைத்து, பொடித்து,ஆம்சூர் பொடியாக்கிவைத்துக் கொண்டு இப்படி உபயோகித்துக் கொள்ளலாம். கேரட் அல்வா அல்லது வறுத்த கோதுமை மாவு அல்வா செய்யும்போது எந்த அளவு மாவு சேர்க்கிறீர்களோ அதற்கோற்றாற்போல் நெய் சேர்த்து, வறுத்து அதன்பிறகு அதில் பால் அல்லது தண்ணீர் சேர்த்துக் கிளறவும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துச் செய்தால் ஹெல்த்தியாகவும் சுவையாகவும் இருக்கும்.
* வெண்டைக்காயை எப்படி வதக்கினாலும் கொழ கொழப்பாக இருந்தால் ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி வெண்டைக்காயுடன் சேர்த்து வதக்கினால் கொழ கொழப்பு நீங்கிவிடும்.
* சாம்பார் செய்யும்போது, புளியின் அளவைக் குறைத்தோ, முற்றிலும் தவிர்த்தோ தக்காளியைச் சேர்த்துக் கொதிக்கவிட்டால், சுவைகூடும். இது, எல்லாவித டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சைடிஷ்.- எம்.நிர்மலா.
* மேரி பிஸ்கட்டை பொடித்து அதனுடன் மில்க் மெய்டைக் கலக்கவும், அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம், முந்திரி சேர்த்து அதை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் பிஸ்கட் ஸ்வீட் ரெடி.
* பிரெட் காய்ந்துவிட்டால் அதை வீணாக்காமல் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். வறுவல், கூட்டு, இவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால், பிரெட் பொடியை சிறிது தூவினால் சரியாகிவிடும். டேஸ்ட்டும் கூடும்.
* புலாவ் குழைந்துவிட்டால் இரண்டு தட்டுக்களில் நெய்யைத் தடவி, அதில் புலாவை பரப்பி வைக்கவும். புலாவ் ஆறியவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். அதை சூடுபடுத்தினால் சூடான புலாவ் தயார். பலவிதமான சாப்பாடு பொட்டலங்களைக் கட்டினால், பொட்டலங்களின் மீது ஸ்கெட்ச் பேனாவால் எழுதி வைத்தால், ஒவ்வொரு முறையும் பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்காது.
* மோர்க்குழம்பு செய்யும்போது ஒரு தேக்கரண்டி பச்சைக் கடுகை மற்றவற்றுடன் சேர்த்து அரைத்துவிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
* முட்டைக்கோஸை சமைக்கும்போது அதில் சிறிதளவு பால் ஊற்றினால் அதிக சுவையுடனும் சத்துடனும் இருக்கும்.
* இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் கலந்தால் இட்லி சாஃப்ட்டாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும்.
* உளுந்துடன் ஒரு கைப்பிடி சாதம் சேர்த்து அரைத்து உளுந்து வடைசெய்தால் சூப்பராக இருக்கும். – அமுதா அசோக்ராஜா.
* சப்பாத்திக்கு சன்னா மற்றும் சைடிஷ் செய்யும்போது, இறக்கியவுடன் வெண்ணெய் சேர்த்துக் கிளறி, புதினா இலைகள் சேர்த்து மூடிவிடசுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
* கொண்டைக்கடலை சுண்டல் தாளிக்கும்போது இரண்டு கேரட்டை துருவி சேர்த்து வதக்கினால் சுவை அதிகமாகும்.
* எந்த கேசரி செய்தாலும் 2 தேக்கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால்ருசியாக இருக்கும்.
* ரவா தோசை செய்ய அரிசி மாவுக்குப் பதிலாக சாதத்தை மிக்ஸியில் குழைவாக அடித்து கலந்து செய்தால் தோசை மொறுமொறுவென முறுகலாகஇருக்கும்.
* எண்ணெயில் பொரித்த அப்பளம், வத்தல் போன்றவை மீந்துவிட்டால் அதை பாலிதீன் பையில் போட்டு கட்டி ஃபிரிஜ்ஜில் வைத்தால் நமத்துப் போகாது.
* மண் பாத்திரம் வாங்கியதும் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் வைக்க வேண்டும். சட்டி சற்று சுட்டதும் கழுவி விட, மண் வாசனை போய், விரிசல் ஏற்படாது. – எம்.வசந்தா.
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அதை மசித்து உளுந்து மாவுடன் சேர்த்து அரைத்து உளுந்துவடை செய்தால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.
* குருமாவில் காரம் அதிகமாகிவிட்டால் ஒரு கப் தயிர் சேர்த்து லேசாகக் கொதிக்க விட்டால் காரம் சரியாகி விடுவதுடன் டேஸ்ட்டும் கூடும்.
* சாம்பார் பொடி அரைக்கும்போது அதனுடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்துவிட்டால் வண்டுகள் வராது.
* சூடான எண்ணெயில் சிறிது மைதாமாவு சேர்த்த பிறகு எதைப்பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.
* வத்தக்குழம்பு செய்யும்போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும் மிளகுப் பொடியும் கலந்தால் மிகவும் சுவையுடன் இருக்கும்.– அசோக்ராஜா.
* புதிய காஸ்கெட் வாங்கியதும் பழையதை தூக்கிப் போட்டுவிட்டால் குழப்பம் வராது. காளானை நியூஸ் பேப்பரில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும். முளைக்கீரையின் தண்டுகளையும் பொடியாக நறுக்கி கீரையுடன் சேர்த்து பொரியல் செய்யலாம். ருசியாய் இருக்கும். தண்டும் வீணாகாது. இது ஊளைச் சதையை குறைக்கும். இரண்டு பச்சைமிளகாயை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் ஈரம் கசியாது. கட்டிப் பெருங்காயத்துடன் பச்சை மிளகாயை போட்டு வைத்தால், பெருங்காயம் இளகிவிடும். அதை சின்ன சின்னதாக உருட்டி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இட்லி, தோசை மாவை சுடுதண்ணீர் பாத்திரத்திற்கு அருகில் வைத்தால் மாவு பொங்கிவிடும்.
– இந்திராணி தங்கவேல்.
கிச்சன் டிப்ஸ்
previous post