பாங்காக்: தாய்லாந்தில் கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில், புராகிரசிவ் மூவ் பார்வர்டு கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றியது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான பிட்டா லிம்ஜாரோன்ரேட் என்பவரை ராணுவத்தால் நியமிக்கப்பட்ட செனட் சபை அங்கீகரிக்க மறுத்து விட்டது. இதனால் அந்த கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தேர்தலுக்கு முன்னதாக மன்னருக்கு அதிகாரங்கள் வழங்கும் அரசியல் சட்ட பிரிவில் மாற்றங்கள் செய்யக்கோரி மூவ் பார்வர்டு கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டது. இது தொடர்பான தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அரசியலமைப்பு நீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறியதற்காக மூவ் பார்வர்டு கட்சியை கலைக்கும்படி நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.