சென்னை: தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி கிண்டி ரேஸ் கோர்ஸ் பூங்காவாக மாறுகிறது. விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பு தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பிரம்மாண்ட பசுமை பூங்கா அமைய உள்ளது. ரூ.4,832 கோடி மதிப்பு நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது