குஜராத் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் 3 கிலோ எடையில் நவராத்திரி சிறப்பு டர்பன் அதாவது தலைப்பாகை ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அந்த பாகையில் ராமர் கோவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் சந்திரயான் -3 உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கிய தலைப்பாகையை அணிந்துகொண்டு போஸ் கொடுக்க எங்கும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதே போல் பலரும் தங்கள் கைவண்ணத்தில் பல விதமான அலங்காரங்களுடன் நவராத்திரி பண்டிகைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விதவிதமான பொம்மைகளாக விற்பனை என எங்கும் தெருக்கள் வண்ணமயமாகக் காட்சியளிப்பதைக் காண முடிகிறது.