மதுரை: இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி ரூபாயை இழப்பீடு கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ராமநாதபுரம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், மனுதாரர் கோரிக்கை பற்றி ஒன்றிய அரசு, மாநில அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31ல் ராமேஸ்வரத்தில் இருந்து மூக்கையா, முத்து முனியன், மலைச்சாமி, ராமச்சந்திரன் 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர். அன்றைய தினம் இலங்கை அணி இந்திய கிரிக்கெட் அணியிடம் தோல்வி அடைந்தது, இதனால் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.