தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே நாட்டு வெடி குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நாட்டு வெடி குடோனில் அனுமதியின்றி வெடி தயாரித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் 18 வயது இளைஞர் ரியாஸ், சுந்தர்ராஜ் (60) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். பட்டாசு குடோன் அனுமதியின் இயங்கியதாகத் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.