ஊத்தங்கரை: கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜாஜி நகரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள தேவிகாபுரத்தில் நடைபெறும் உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஒன்றரை வயது கை குழந்தையுடன் 9 பேர், திருவண்ணாமலை நோக்கி காரில் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்ற போது, எதிரே வந்த பிக்கப் வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில், காரில் வந்த பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சீனிவாசன்(23), வேலாயுதம் மகள் ஷாம்லி(25) மற்றும் பாப்பாத்தி(54) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கை குழந்தை உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தஇரண்டு பைக்குகள் மீது தனியார் பஸ் மோதியதில் ஜெய்சீலன் (19), மணிகண்டன் (22), புருஷோத்தமன் (35) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.