Wednesday, February 28, 2024
Home » கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்குள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்குள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சிவசங்கர் பேட்டி

by Porselvi

கடலூர் : போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் எந்த நேரமும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடந்தது.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் 9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.இந்த நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்” போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் எந்த நேரத்திற்கும் பேச்சுவார்த்தை நடத்த தயார். போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிக்கைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தத் தடையும் இருக்காது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சீரழிந்த போக்குவரத்து துறையை தமிழக முதலமைச்சர் மீட்டெடுத்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்குள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ” என தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi