பட்டர் குக்கீஸ்
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
பொடித்த சர்க்கரை – 1/2 கப்
வெண்ணெய் – 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன் (விரும்பினால்)
பால் – 1 (அ) 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்).
செய்முறை
வெண்ணெயையும், பொடித்த சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். சர்க்கரை நன்கு கரைந்து வெண்ணெய் குழைந்து வந்தால், குக்கீஸ் மெதுவாக வரும். ஒரு சல்லடையில், கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு சலித்து எடுத்துக்கொள்ளவும். இதனை அடித்து வைத்திருக்கும் வெண்ணெய் கலவையில் போட்டு நன்றாக சேர்த்து பிசையவும். எசன்ஸ் சேர்ப்பதாக இருந்தால், மாவு பிசையும்போதே சேர்த்து விடவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் பேப்பர் விரித்து தயார் செய்து வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவை பெரிய நெல்லிக்காய் அளவிற்கு கிள்ளி, உருண்டைகளாக உருட்டி ட்ரேயில் வைக்கவும். பின்னர் சிறிய கரண்டி கொண்டு ஒவ்வொரு உருண்டையையும் லேசாக அழுத்தி விடவும். இதனை 350 டிகிரி சூடு செய்த அவனில் வைத்து 10, 12 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். இப்போது சுவையான க்ரிஸ்பி பட்டர் குக்கீஸ் தயார்.
பாதாம் குக்கீ ஸ்டிக்ஸ்
தேவையான பொருட்கள்
மைதா – 1¼ கப்
வெண்ணெய் – ½ கப்
பொடி செய்த சக்கரை – ½ கப்
பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்
பேக்கிங் சோடா – ¼ டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் – ½ கப்.
செய்முறை
மிக்ஸியில் பாதாமை போட்டு அரைத்துக் கொள்ளவும். அரை கப் பட்டர் மற்றும் பொடி செய்த சர்க்கரையை பீட்டர் பயன்படுத்தி பீட் செய்யவும். பட்டர் ஒயிட் ஆகும் வரை பீட் பண்ணவும். அதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து ஸ்படுலா (Spatula) பயன்படுத்தி கலக்கவும். இப்போது அதில் கால் கப் அரைத்த பாதாம் சேர்த்து கலக்கவும். கொஞ்சம் பொடி செய்த பாதாம் மேல் மாவை வைத்து, அதன் மேல் ஒரு பட்டர் பேப்பர் வைத்து ரொட்டி போல் உருட்டவும். இப்போது அதை செவ்வக வடிவத்தில் கட் பண்ணவும். ஒரு பெரிய பாத்திரத்தில் கால் கிலோ கல் உப்பு போட்டு, அதற்கு மேல் ஒரு பவுலை தலைகீழாக வைத்து அதன் மேல் ஒரு பிளேட்டில் கட் செய்த பாதாம் ஸ்டிக்ஸ் வைத்து பாத்திரத்தை மூடவும். 30 நிமிடத்துக்கு பிறகு வெளியில் எடுத்துவைத்து ஆறவிட்டு பரிமாறினால் பாதாம் குக்கீ தயார்.