கியா நிறுவனம், செல்டாஸ் வரிசையில் எச்டிஇ, எச்டிகே, எச்டிகே பிளஸ், எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ் பிளஸ், ஜிடிஎக்ஸ் பிளஸ் மற்றும் எக்ஸ் லைன் ஆகிய வேரியண்ட்களை ஏற்கெனவே சந்தைப்படுத்தியுள்ளது. இவற்றில் எச்டிகே மற்றும் எச்டிகே பிளஸ் ஆகிய பேஸ்லிப்ட் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த காரில் இடம் பெற உள்ள அம்சங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதன்படி, இந்தக் காரில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டைப் சி சார்ஜிங் போர்ட், குரூஸ் கன்ட்ரோல், புஷ் ஸ்டார்ட் பட்டன் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டர் இடம் பெறும் என தெரிகிறது. கார் இன்ஜினில் மாற்றம் இருக்காது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வேரியண்ட் இடம்பெறும். இதுதவிர 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வேரியண்டும் அறிமுகம் செய்யப்படலாம் எனவும், வேரியண்ட்களுக்கு ஏற்ப ஷோரூம் விலையாக சுமார் ரூ.11 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.