புதுடெல்லி: தெலங்கானாவை சேர்ந்த பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ. காசிரெட்டி நாராயணா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சட்டமன்றத்தின் காலம் முடிவடைவதால், அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கல்வாகுர்தி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ.வான, பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த காசிரெட்டி நாராயண ரெட்டி கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகினார். டெல்லி சென்ற அவர் அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருடன் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் மூத்த தலைவர் தாக்கூர் பாலாஜி சிங், மற்றும் நூறுக்கும் மேற்பட்ட அவர்களது ஆதரவாளர்கள் காங்கிரசில் இணைந்தனர். இத்தகவலை காங்கிரஸ் கட்சி அதனுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளது.