டெல்லி: காலிஸ்தான் தீவிரவாதி கொலை தொடர்பாக கனடா கூறும் குற்றச்சாட்டு அரசியல் ரீதியானது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா உடனான பிரச்சனை குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்க்ஷி டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான ஆதாரம் எதையும் இந்தியாவிடம் கனடா அரசு கொடுக்கவில்லை. கனடாவில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்கள் பற்றி அந்நாட்டிடம் ஆதாரங்களை இந்தியா தந்துள்ளது என்று கூறினார்.