திருத்தணி: திருத்தணி தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னதாக கல்லூரியில் தாளாளர் டாக்டர்.எஸ். பாலாஜி குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். வேதநாயகி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, துணை முதல்வர் முனைவர் எஸ். பொற்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேலும், ஓணம் பண்டிகை முன்னிட்டு கேரளா பாரம்பரிய உடைகள் அணிந்தும். கேரளாவின் கலாச்சார பாரம்பரிய கதகளி நாட்டிய நிகழ்ச்சிகளையும் மாணவிகள் நடத்திக் காட்டினர். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாணவிகளின் அத்த பூக்கோலம் ரம்யமாக காட்சி அளித்தது. மாணவி ஒருவர் மாபலி மன்னர் வேடமணிந்து கலந்து கொண்டார். இதில், கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.