கேரள: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எர்ணாகுளம் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் சமூக வலைதளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவு செய்ததால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.