சென்னை: முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்த கருத்துருவை பரிசீலிக்க கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் கோரிக்கை தொடர்பாக வரும் 28-ம் தேதி ஒன்றிய சுற்றுசூழல் அமைச்சகம் பரிசீலிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ளக் கூடாது. சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.