திருவனந்தபுரம்: கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்து பெண் பலியானார். இதைத் தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பல இடங்களில் வன்முறையில் முடிந்தது. திருவனந்தபுரத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜின் வீட்டு கேட்டை தாண்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் விரட்டினர். சிலர் போலீஸ் மீது கற்களை வீசினர். தடியடி மற்றும் கல்வீச்சில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சரை கண்டித்து காங்., பாஜ போராட்டம்
0