கேரள அரசின் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி ரூ.20 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி பெயர் விவரம் வெளியிட மறுப்பு
திருவனந்தபுரம்: கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி XD 387132 என்ற எண்ணுக்கு கிடைத்தது. பரிசு யாருக்கு கிடைத்தது என்பது யாருக்கும் தெரியாத நிலையில், சத்யன் என்பவர் நேற்று கண்ணூர் மாவட்டம் இரிட்டியில் உள்ள தனியார் வங்கிக்கு மிகவும் ரகசியமாக வந்து பரிசு பெற்ற லாட்டரியை டெபாசிட் செய்துவிட்டு சென்றார். தன்னுடைய விவரங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இதனால் அவரை பற்றி விவரங்களை வெளியிட வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


