திருவனந்தபுரம் : குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கறிஞர் பி.வி.ஜீவேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்தியில் சட்டங்களுக்கு பெயர் வைப்பது அரசியல் சட்டத்தின் 348-வது பிரிவுக்கு எதிரானது என வாதம் முன்வைக்கப்பட்டது.