திருவனந்தபுரம் : கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 20 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது கேரள அரசு.