கேரளா: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 357 பேர் உயிரிழந்துளளனர். 357 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. மேலும் 200 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.