வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. கடந்த ஆண்டு பருவமழையின் போது புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு முண்டக்கை, சூரல் மழைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியது. சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலரும் தங்களது உடைமைகளை இழந்தனர்.
கடந்த ஆண்டு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முண்டக்கை பகுதியில் இருக்க கூடிய வனம் சார்ந்த மலைப்பகுதிகளில் பெருமளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வெள்ள நீர் முண்டக்கை மற்றும் சூரல் மலை வழியாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த பகுதிகளில் தற்போது மக்கள் யாரும் இல்லாததால் பெரிய ஆபத்து ஏதும் இல்லை. ஆனால், தொடர்ந்து அதிகாரிகள் அந்த ஆற்று நீரை கண்காணித்து வருகின்றனர். ஆற்றின் போக்கு மாறுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கேரளாவில் வயநாடு பகுதியில் பெய்து வரும் பருவமழை காரணமாக புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.